புரட்டாசி நான்காவது சனிக்கிழமை: அரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி நான்காவது சனிக்கிழமை: அரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.
புரட்டாசி நான்காவது சனிக்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மூலவர் ஆதிசேஷன் மீது, அனந்த சயன கோலத்திலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். கடந்த மூன்று வாரத்தை காட்டிலும், நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு அமைப்பினரின், நாராயண பஜன் நடந்தது.


* கோபி அருகே, பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில், சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. இதேபோல், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மூலவாய்க்கால் பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.


* புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூர், கரிவரதராஜ பெருமாள், தங்க காப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தாசர்களுக்கு, அரிசி படி மற்றும் காய்கறிகளை படைத்து, பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.


கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில், பக்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, பக்தர்கள் வழிபட்டனர். குதிரை வாகனத்தில், தம்பதி சமேதரராய், பெருமாள் எழுந்தருளினார்.


* பவானிசாகர், அண்ணா நகர் அருகேயுள்ள கதிர் பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகளுக்கு, பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.


* பவானி, ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை மீது அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் காட்சி தந்தார். இதேபோல் பெருமாள்மலை, மங்களகிரி பெருமாள் கோவில், சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X