அழிந்துபோன கொப்பு வாய்க்கால் விபரம்: சான்றுகளுடன் விவசாயிகள் சமர்ப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழிந்துபோன கொப்பு வாய்க்கால் விபரம்: சான்றுகளுடன் விவசாயிகள் சமர்ப்பிக்கலாம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: அழிந்து போன கொப்பு வாய்க்கால் குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள், சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பவானிசாகர் அணை மற்றும் மதகுகளில் திறக்கப்பட்ட தண்ணீர், பாசன பகுதிகளில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில வாய்க்கால்களில் சென்று, அடுத்த கீழ் பகுதிகளில் ஆர்ஜிதம் செய்யாத, கொப்பு வாய்க்கால் மூலம் செல்கிறது. தற்போது கொப்பு வாய்க்கால், ஆங்காங்கே அழிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைமடை நிலங்களுக்கு, தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டரிடம் முறையிடப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், விபரப் பட்டியல் தருமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே, கொப்பு வாய்க்கால் அழிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கிராம புல எண், புல வரைபடம், கூட்டு வரைபடம், ஆயக்கட்டு என்பதற்கான வி.ஏ.ஓ., மற்றும் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் சான்றுகளுடன் வரும், 25க்குள், ஈரோட்டில், மேட்டூர் சாலையில் உள்ள, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகம், கவுந்தப்பாடி பகிர்மான கமிட்டி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விபரம் தேவைப்படுவோர், 98429 40845, 94880 67068 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X