அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஏரிக்கரை சாலையில் எரியாத மின்விளக்கு: பவானி - அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள, காடையம்பட்டி ஏரிக்கரை சாலையில், கிராம மக்களின் வசதிக்காக, மின்விளக்குகள், தொட்டிபாளையம் பஞ்., சார்பில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சில மின்கம்பத்தில் உள்ள மின் விளக்குகள், எரியாமல் உள்ளது. விளக்கு வெளிச்சமின்றி அவதிப்படுவதாக, அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எரியாத மின் விளக்குகளை எரிய வைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தார்ச்சாலையை சீரமைக்கணும்: கொடுமுடி யூனியன், கொளத்துப்பாளையம் ஊராட்சி, கொம்பனைப் புதூர் - ஊஞ்சலூர் ரயில்வே கிராசிங் செல்லும் சாலை தார்ச்சாலையில், அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. சாலை போட்டு பல ஆண்டுகளாவதால், பல இடங்களில் சேதமடைய தொடங்கியுள்ளது. மழை பெய்வதால், சிறு குழியில் தண்ணீர் தேங்கி, பெரியதாக மாறத் தொடங்கியுள்ளன. மெகா பள்ளங்களாகி, வாகன ஓட்டிகளை திண்டாட வைக்கும் முன், சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

பாலத்தில் குழி; மக்களுக்கு கிலி: புன்செய்புளியம்பட்டி அடுத்த, காவிலிபாளையத்தில் இருந்து, வாணிச்சிபாளையம் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இங்கு, அருகில் உள்ள தடுப்பணைக்கு நீர் செல்ல, கால்வாய் அமைத்து, அதன் மேல், சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலம் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இரவில், அந்த வழியாக வருவோர், குழி இருப்பது தெரியாமல், விபத்தில் சிக்குகின்றனர். சேதமடைந்த சிறு பாலத்தை சீரமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் அங்கன்வாடி கட்டடம்: அரச்சலூர் பேரூராட்சி, சில்லாங்காட்டு புதூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், படிக்கின்றனர். தற்போது, கட்டட உட்புற மேற்பகுதி, சிமென்ட் கூரைகள், பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், சிமென்ட் கூரைகள் பெயர்ந்து விழுவதால், குழந்தைகள், அச்சத்துடன் படிக்கும் நிலை உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள, இந்த கட்டடத்தை கலெக்டர் ஆய்வு செய்ய, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜி.?ஹெச்சில் அமர இருக்கை இல்லை: கோபி அரசு மருத்துவமனையின், பின் பகுதியில், இருபாலருக்கான வார்டுகள் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் அமர, போதிய இருக்கை வசதியின்றி, மரத்தடி மற்றும் தரையிலும் தஞ்சமடைகின்றனர். குறிப்பாக, வயதான முதியவர்கள், கீழே அமர முடியாமல், சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளின் உறவினர்கள் அமரும் வகையில், இருக்கை வசதி செய்து தர, நோயாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X