தொழிலாளி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: மொடக்குறிச்சி, தூரபாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் குப்பன், 60; தொழிலாளி. கடந்த, 10ல் பெருமைபாளையம் என்ற ஊரில், லோகநாதன் என்பவர் தோட்டத்தில் வேலைக்கு சென்றார். கூலி தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குப்பனை, லோகநாதன் தாக்கியதாக தெரிகிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் இறந்தார். ஆரம்பத்தில் போலீசார், தற்கொலை வழக்கு பதிய திட்டமிட்டனர். உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். உடற்கூறு பரிசோதனை முடிந்து, 12ம் தேதியும் உடலை வாங்கவில்லை. எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டமாக, போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி, மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X