வெள்ளோடு ஏரியில் 5,000 மீன் குஞ்சுகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளோடு ஏரியில் 5,000 மீன் குஞ்சுகள்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னிமலை: உலக வலசை பறவைகள் தினத்தை முன்னிட்டு, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில், பறவைகளின் உணவுக்காக, மீன் குஞ்சுகள் விடப்பட்டன. வெள்ளோடு அருகே, வி.மேட்டுப்பாளையத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. எல்.பி.பி., வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சரணாலய குளத்துக்கு கசிவுநீர் வந்து, பாதி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஏராளமான பறவைகள், வரத் தொடங்கியுள்ளன. இங்கு தங்கியுள்ள பறவைகளின் உணவு தேவைக்கு, ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உலக வலசை பறவைகள் தின விழாவை முன்னிட்டு, 5,000 மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டன. மாவட்ட வன அலுவலர் விஷ்மிஜ் விஸ்வநாதன், மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டார். வனச்சரக அலுவலர் ரவீந்தரநாத், மேட்டுப்பாளையம் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு தலைவர் தலைவர் பாலசுப்ரமணியன், சத்தியமங்கலம் சுற்றுச்சூழல் பல்லுயிர் சங்கத்தினர், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X