ஆயில் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து: கேன்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயில் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து: கேன்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மொடக்குறிச்சி: ஈரோடு அருகே, ஆயில் தயாரிக்கும் ஆலையில், தீ விபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட கேன்கள், வெடித்து சிதறியதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சி, வெண்டிப்பாளையம், கோணவாய்க்கால் அருகே, காந்திபுரத்தில், ஆயில் மில் உள்ளது. மஞ்சள் கழிவுகளிலிருந்து, ஆயில் தயாரித்து, செங்கல் சூளைகளுக்கு எரியூட்டும் பொருளாக, விற்பனை செய்கின்றனர். பெங்களூரை சேர்ந்த சண்முகம், 50, நடத்தி வருகிறார். இங்கு, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரிகின்றனர். நேற்று மதியம், 1:30 மணியளவில், ஆலையில் திடீரென தீப்பிடித்தது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கேன்களுக்கும் தீ பரவியது. இதனால், 30க்கும் மேற்பட்ட கேன்கள், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. விபத்தை வேடிக்கை பார்க்க வந்த மக்கள், அலறியடித்து ஓடினர். அதேசமயம் தீப்பிடித்தவுடன் தொழிலாளர்கள், வெளியேறி விட்டனர். கொளுந்து விட்டு எரிந்த தீயால், பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில், மூன்று வாகனங்களில், ஒரு மணி நேரம் போராடி, வீரர்கள் தீயை அணைத்தனர். மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X