பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: நீர்பிடிப்பு பகுதியில், தொடர் மழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில், 15 நாட்களுக்கும் மேலாக, மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கனமழையால், கோவை மாவட்டம், பில்லூர் அணையில் இருந்து, பவானிசாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை, 5,319 கனஅடி நீர் வரத்தானது. பாதுகாப்பு கருதி, கடந்த, 7ம் தேதி முதல், அணைக்கு வரும் தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை, 3,000 கன அடி உபரிநீர், பவானி ஆற்றிலும், கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடியும் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 102 அடி; இருப்பு, 30.3 டி.எம்.சி., யாக இருந்தது. பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து, வெளியேற்றம், ஒரே அளவில் இருப்பதால், கடந்த ஏழு நாட்களாக, 102 அடியிலேயே நீர்மட்டம் நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X