தமிழகத்தில் மட்டும் தான் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் இயக்கம்: செங்கோட்டையன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மட்டும் தான் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் இயக்கம்: செங்கோட்டையன்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ''மனித நேயத்தோடு, லாப நோக்கம் இல்லாமல், தமிழகத்தில் மட்டும் தான் குறைந்த கட்டணத்தில், அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், ஈரோடு மண்டலம் சார்பில், காசிபாளையம் கிளையில், ஐந்து புதிய பஸ்கள் துவக்க விழா நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் புதிய பஸ்களை இயக்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழல் துறையை பொறுத்தவரை, ஜனவரி மாதத்துக்கு பின் பாலிதீன் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர், சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ஆறு மாத காலத்துக்கு முன்னதாக, அனைவரையும் அழைத்து பேசி உத்தரவிட்டு அமல்படுத்தி உள்ளனர். அதனடிப்படையில் பள்ளி கல்வி துறையிலும் மிக விரைவில் அப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். பாலிதீன் பொருட்கள் முழுமையாக பயன்படுத்த கூடாது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை கற்றுதரும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து துறை பொறுத்தவரை, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கிறது. ஈரோடு மண்டலத்தில், 112 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 51 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 56 பஸ்களை இயக்க பாடி கட்டும் பணி நடக்கிறது. விரைவில் அந்த பஸ்களும் இயக்கப்படும். மனிதநேயத்தோடு தமிழக அரசு மட்டும் தான் குறைந்த கட்டணத்தில் பஸ்களை இயக்குகிறது.மக்கள் நலனை கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் இப் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றமாக இருந்தாலும் சரி, எதிர்கட்சிகளாக இருந்தாலும் சரி நேரடியாக அவர்களுக்கு சட்டசபையில் தான் பதில் அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X