அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நூலகத்துக்கு பூட்டு; வாசகர்கள் அவதி: மொரப்பூர் அடுத்த, வகுத்துப்பட்டி பஞ்.,ல், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் பயன் பெறும் வகையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கடந்த, 2008 - 09ல், 3.25 லட்சம் ரூபாய் மதிப்பில், பொது நூலக கட்டடம் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், பழுது பார்க்கப்பட்ட நிலையில், நூலகம் முறையாக திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. இதனால், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
சேவை மைய கட்டடம் வீண்: தர்மபுரி அடுத்த, கடகத்தூரில், 2016ல், 17 லட்ச ரூபாய் மதிப்பில், கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. இதை, அதிகாரிகள் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளனர். இதனால், கடகத்தூர் பஞ்.,க்குட்பட்ட மக்கள், பல்வேறு சான்றிதழ்கள், விண்ணப்பங்கள் பெற, தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் உள்ள, சேவை மையத்துக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களுக்கு நேர, பயண விரயம் ஏற்பட்டு வருகிறது.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி: நல்லம்பள்ளி ஒன்றியம், எ.ஜெட்டிஹள்ளியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த, சில ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம், பல்வேறு இடங்களில் சிறுமின் விசை பம்புடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைத்தது. பெரும்பாலான தொட்டிகள் தண்ணீர் வரத்தின்றி, காட்சி பொருளாக உள்ளது. ஒகேனக்கல் குடிநீரும் வாரத்தில், இரு தினங்கள் மட்டும், மிக குறைந்து அளவில் வினியோகிக்கப்படுவதால், மக்கள் அவதியடைகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X