பென்னாகரம் ஜி.?ஹச்.,க்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பென்னாகரம் ஜி.?ஹச்.,க்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேசிய தர உறுதித்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், தரமான சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு, மருத்துவமனை வழங்கும் சேவைகள் குறித்து, நோயாளிகளின் கருத்துக்கள் ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும், மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதுடன், மருத்துவமனையில் உள்ள, ஒரு படுக்கைக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் பரிசு தொகை வழங்கி, மத்திய அரசு கவுரவித்து வருகிறது. நடப்பாண்டுக்கான, தேசிய தரச்சான்றிதழ் வழங்க, தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்ட, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், தேசிய ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து, இந்த மருத்துவமனைக்கு, தேசிய தரச்சான்றிதழை முதல்வர் பழனிசாமி வழங்கினார். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை, கலெக்டர் மலர்விழி வாழ்த்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X