அறிவியல் கண்காட்சி: 1,500 மாணவர்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் கண்காட்சி: 1,500 மாணவர்கள் பங்கேற்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நடந்தது. அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் சிவனருள் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தார். 242 பள்ளிகளை சேர்ந்த, 1,500 மாணவர்கள், 700 படைப்புகளை வைத்திருந்தனர். மூலிகை தோட்டம், விலங்கியல், அரங்கங்கள், கணிதம், தொன்மை மன்றங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு, சூரிய ஒளிஆற்றல் உட்பட பல்வேறு அரங்கங்கள் இடம்பெற்றிருந்தன. கூட்டுறவு சங்க தலைவர்கள் அன்பழகன், பொன்னுவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் குழுவினர், மாநில அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதிபெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X