வாக்காளர் பட்டியல்: பார்வையாளர்கள் வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல்: பார்வையாளர்கள் வருகை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: 'வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள், ஆய்வு பணிக்காக, இன்று தர்மபுரிக்கு வரவுள்ளனர்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள், கடந்த, 1ல் துவங்கியது. இது வரும், 30ல் முடிவடைகிறது. இப்பணிகளை ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த்ராவ்விஷ்ணு பாட்டில், இன்று வரவுள்ளார். காலை, 11:00 மணிக்கு, லோக்சபா, சட்டசபை உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். வாக்காளர் பட்டியல் தொடர்பாக, பொதுமக்கள் யாரேனும் சந்திக்க விரும்பினால், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், அவரை சந்திக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X