அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆபத்தான கட்டடம் அகற்றப்படுமா? பர்கூர் ஒன்றியம், மகாதேவகொல்ல அள்ளியில், கடந்த, 2013ல், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடம் கட்டப்பட்டது. நாளடைவில், பராமரிப்பில்லாமல், கட்டடம் சேதமடைந்து, ஒரு பக்கம் இடிந்து, ஆபத்தான முறையில், தொங்கிக் கொண்டுள்ளது. இதன் பக்கத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதனால், கட்டடம் இடிந்து விழுந்தால் பேராபத்து ஏற்படும் அபாயமுள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் சேதமான கட்டடத்தை இடித்து, அகற்ற வேண்டும்.
தொட்டி இருக்கு; தண்ணீர் இல்லை: பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி பஞ்சாயத்து புலிகுண்டாவில், கடந்த, 2013ல், ஒரு லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. ஓராண்டு மட்டுமே செயல்பட்ட நிலையில், மோட்டார் பழுதால், தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதியடைகின்றனர். மோட்டார் பழுதை நீக்கி, சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X