பாறையில் கார் மோதி இன்ஜினியர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாறையில் கார் மோதி இன்ஜினியர் பலி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, சாலையோரம் இருந்த பாறையில், கார் மோதிய விபத்தில், தனியார் கம்பெனி டிசைனிங் இன்ஜினியர் பலியானார். திருவள்ளூர் மாவட்டம், சின்ன ஈகாடு அருகே உள்ள போக்குவரத்து நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 23, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனியில், டிசைனிங் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவரும், அதே கம்பெனியில் வேலை செய்து வரும், சபியுதின், 25, ஆம்பூர் மதன், 23, நாமக்கல் கவுதம், 23, புதுச்சேரி தர்மராஜ், 28, காட்பாடி விக்னேஷ், 25, மதுராந்தகம் ராமமூர்த்தி, 21, நவீன் ஆகிய, எட்டு பேரும், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, இர்டிகா காரில், நேற்று காலை சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். ராஜேஷ், காரை ஓட்டிச் சென்றார். தேன்கனிக்கோட்டை தாலுகா, குந்துக்கோட்டை அடுத்த, ராமச்சந்திரம் பஸ் ஸ்டாப் அருகே, காலை, 9:00 மணிக்கு, சாலையோர பாறையில், கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நவீன் தவிர, மற்ற, ஏழு பேரும் காயமடைந்தனர். அனைவரும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராஜேஷ் வழியிலேயே இறந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X