கோவில் பிரச்னையால் மறியல்: போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் பிரச்னையால் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: அஞ்செட்டி அருகே, கோவில் விவகாரத்தில் இரு கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், மறியல் போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, அஞ்செட்டி அடுத்த, நாட்றாம்பாளையம் அருகே உள்ள, பத்திகவுண்டனூர் மற்றும் ஜீவா நகர் கிராமத்துக்கு இடையே, கோட்டை முனியப்பன் கோவில் உள்ளது. இதை யார் பராமரிப்பது, யாருக்கு சொந்தம் என்பதில், கடந்த சில மாதமாக, இரு கிராமத்துக்கு இடையே பிரச்னை உள்ளது. இதனால், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனில், சமாதான பேச்சு வார்த்தைக்கு இரு கிராம மக்களையும் அழைத்தனர். இரு தரப்பிலும், ஆட்கள் வராததால், பேச்சுவார்த்தை தள்ளிபோனது. பூட்டியிருந்த கோட்டை முனியப்பன் கோவிலில், ஜீவா நகர் மக்கள் பூஜை செய்வதாக, பத்திகவுண்டனூர் பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, பத்திகவுண்டனூர் மக்கள், நேற்று காலை, 7:30 முதல், 8:30 மணி வரை, அஞ்செட்டி-ஒகேனக்கல் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X