சர்வதேச பேரிடர் தணிக்கும் தின பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச பேரிடர் தணிக்கும் தின பேரணி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஓசூர்: சர்வதேச பேரிடர் தணிக்கும் தினம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க, திருத்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. ஓசூர் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை சார்பில், சர்வதேச பேரிடர் தணிக்கும் தினம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க, திருத்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. ஓசூர் ஆர்.டி.ஓ., விமல்ராஜ் பேரணியை துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஏரித்தெரு, எம்.ஜி.,ரோடு, பாகலூர் சாலை வழியாக, பழைய நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்ற, மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சசிகலா, பெண்களை பாதுகாக்கும் வகையான ஆப் குறித்து விளக்கினார். ஓசூர் தாசில்தார் முத்துபாண்டி, சமூக ஆர்வலர் ராதா உட்பட பலர் பங்கேற்றனர். * கிருஷ்ணகிரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சர்வதேச பேரிடர் தணிக்கும் தினம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணியை, டி.ஆர்.ஓ., சாந்தி துவக்கி வைத்தார். அண்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரிடர் காலங்களில் செய்யக்கூடியது, செய்ய கூடாதது குறித்து, விழிப்புணர்வு பிரசுரங்கள், மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X