நீதிபதியின் மனைவி, மகனை சரமாரியாக சுட்ட பாதுகாவலர்| Dinamalar

நீதிபதியின் மனைவி, மகனை சரமாரியாக சுட்ட பாதுகாவலர்

Updated : அக் 14, 2018 | Added : அக் 14, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குர்கான், நீதிபதி மனைவி, துப்பாக்கிச்சூடு, பாதுகாவலர்

குர்கான் : குர்கானில் கூட்ட நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் நீதிபதியின் பாதுகாவலரால் சரமாரியாக சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம், குர்கானில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் கிருஷண் கந்த். இவரது மனைவி ரித்து மற்றும் 17 வயது மகன் துருவ் ஆகியோர் பாதுகாவலர் மகிபால் (32)உடன் காரில் நேற்று(அக்.13) மதியம் 3 மணியளவில் மார்க்கெட்டிற்கு சென்றனர். 3.30 மணியளவில் வேலைகளை முடித்து விட்டு திரும்பிய ரித்து மற்றும் துருவ், வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய பாதுகாவலர் மகிபால், ரித்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரத்தில் தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியால் ரித்துவை மார்பிலும், வயிற்றிலும் சரமாரியாக சுட்டார். அதை தடுக்க முயன்ற துருவையும் தோள்பட்டை, தலை என 3 முறை சுட்டார். இதில் துருவ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மயங்கிய நிலையில் கிடந்த ரித்துவை, மகிபால் காலால் பலமுறை மிதித்து தாக்கிவிட்டு, காருடன் தப்பிச் சென்றார்.
சம்பவ நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீதிபதி கிருஷணுக்கு போன் செய்த மகிபால், 'உனது மனைவி மற்றும் மகனை கொன்று விட்டேன்' என, கூறி உள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த சிலர் ரித்து மற்றும் துருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ரித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் துருவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு மகிபால் கைது செய்யப்படடார். அவரிடம் நடந்த விசாரணையில், என்னால் இதை நம்பமுடியவில்லை என்று மட்டும் மகிபால் திரும்ப, திரும்ப கூறி வருவதாகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மகிபால், நீதிபதியிடம் தனி பாதுகாலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-அக்-201808:01:19 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன மரியாதை குறைவாக ஏதாவது சொல்லி இருப்பார்கள்.. அதுதான் மிதமிஞ்சிய கோபத்தில் போட்டு தள்ளி இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-அக்-201805:51:16 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்னதான் வெறிபிடிச்சுருக்கோ
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201822:48:02 IST Report Abuse
வல்வில் தூத்துக்குடி கலவரமும் இவனுங்களாலேதான் ! இப்போ பாருங்க இது பிஜேபி சதி நின் கூவிகிட்டே ஒரு டிசைன் ல பேரு வெச்சுகிட்டு வருவானுங்க பாருங்க!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X