புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குறை தீர் கூட்டம் தேவை: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கென தனி குறைதீர் நாள் உள்ளது. அதுபோல், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி குறை தீர் நாள் அறிவிக்க வேண்டும். திங்கட்கிழமை நடக்கும் குறை தீர் முகாமில், மாற்றுத்திறனாளிகள் கலெக்டரை சந்திக்க அதிக நேரம் ஆகிறது. இதனால்,அவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க, தனி குறைதீர் கூட்டம் நடத்தினால், உபயோகமாக இருக்கும்.

- மா.விஸ்வநாதன், குமாரபாளையம்.

சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா? திருச்செங்கோடு - ராசிபுரம் நெடுஞ்சாலையில், வையப்பமலை உள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள பொது கழிப்பிடம் கடந்த பல ஆண்டுகளாக, தண்ணீர் வசதியின்றி பூட்டப்பட்டுள்ளது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- கே.பி.வெங்கடாசலம், வையப்பமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X