4,011 பெண் குழந்தைகள் மீட்பு: விழாவில் அமைச்சர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4,011 பெண் குழந்தைகள் மீட்பு: விழாவில் அமைச்சர் தகவல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருச்செங்கோடு: ''தொட்டில் குழந்தை திட்டத்தில், இதுவரை, 4,011 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்'' என, அமைச்சர் சரோஜா பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை இணைந்து சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா மற்றும் சாரண இயக்க மாநில விருதுகள் வழங்கும் விழா, திருச்செங்கோட்டில் நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தங்கமணி, அமைச்சர் சரோஜா ஆகியோர், மத்திய அரசின், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்ட லோகோவை அறிமுகம் செய்து, விழாவை துவக்கி வைத்தனர். குழந்தைத் திருமண தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''பெண் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.

அமைச்சர் சரோஜா பேசியதாவது: தொட்டில் குழந்தை திட்டத்தில், இதுவரை, 4,011 பெண் குழந்தைகள், 1,011 ஆண் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இரு பெண் குழந்தைகளுடன், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட தாய்மார்களுக்கு, அவர்களின் குழந்தைகள், 18 வயதில் உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்ய, நிதி உதவி அளிக்கும் திட்டத்தில், இதுவரை, ஒன்பது லட்சத்து, 12 ஆயிரத்து, 500 பெண் குழந்தைகளுக்கு, 1,456 கோடி ரூபாய் அளவிற்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில், 2018-19 வரை, 4,500 கோடி ரூபாய்க்கு திட்ட நிதி அளிக்கப்பட்டு, 10.15 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, 1,341 சாரண, சாரணியருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X