அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கால்வாயால் பகுதியினர் அவதி: எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலத்தில் இருந்து, சக்திநாயக்கன்பாளையம் செல்லும் சாலையோரத்தில், நீண்டநாட்களாக திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இது கொசுக்களின் வசிப்பிடமாக மாறியுள்ளதால், அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், தொற்றுநோய் பரவிவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர். எனவே, கால்வாய்க்கு சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
பேவர் பிளாக் சாலை சீரமைக்கப்படுமா? பள்ளிபாளையம் அடுத்த, நாட்டகவுண்டம்புதூரில் நாகர்புற்று கோவிலுக்கு எதிரே, ஆற்றுக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோரத்தில், முட்புதர் வளர்ந்து, மையப்பகுதி வரை வந்து விட்டதால், பொதுமக்கள் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மேலும், சாலையின் மேற்பரப்பிலும் புல் வளர்ந்துள்ளதால்,விஷப்பூச்சிகளும் அதிக எண்ணிக்கையில் உலா வருகின்றன. எனவே, இங்கு தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்.

சாலையோர கல் அகற்றப்படுமா? மல்லசமுத்திரம் ஒன்றியம், கட்டிபாளையம்- எலச்சிபாளையம் சாலையோரத்தில், மிகப்பெரிய பாறாங்கல் காணப்படுகிறது. இப்பகுதியில், போதிய வெளிச்சமில்லாததால், இரவுநேரங்களில் இவ்வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள் அந்த கல்லின்மீது மோதி, விபத்தை சந்திக்கின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பாறாங்கல்லை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பொது கழிப்பிடம் அமைக்கணும்! பள்ளிபாளையம் அடுத்த, ஒன்பதாம்படியில் உயர்மட்ட பாலத்தின் கீழப்பகுதியில், காலியாக உள்ள இடத்தில் முட்புதர் வளர்ந்துள்ளது. மேலும் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் அசுத்தமாக, சுகாதார சீர்கேடாக உள்ளது. ஆற்றுப்பகுதி என்பதால், பலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, காலி இடத்தில் பொது கழிப்பிடம் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்மாற்றி அருகே குப்பை குவிப்பு: குமாரபாளையம், நாராயண நகர் லட்சுமிநாராயண சுவாமி வீதி பகுதியில், மின்மாற்றி அருகே குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. குடியிருப்புகள் அதிகம் உள்ளதால், துர்நாற்றம் காரணமாக மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து அபாயமும் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த வழியாகத்தான் சென்று, வந்தாக வேண்டும். குப்பையை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X