நீதிமன்ற உத்தரவை மீறி தேர்தல் முடிவு அறிவிப்பு: தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்வதில் சிக்கல்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவை மீறி தேர்தல் முடிவு அறிவிப்பு: தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்வதில் சிக்கல்?

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நாமக்கல்: நீதிமன்றம் உத்தரவை மீறி, மோகனூர் சர்க்கரை ஆலை நிர்வாகக்குழு உறுப்பினருக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 17 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், எட்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள, ஒன்பது பதவிக்கு, 32 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம், ஓட்டுகள் எண்ணப்பட்டன. முடிவில், ஒன்பது பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையில், 'தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன' என, உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வக்கீல் கைலாசம், சென்னை உயர்நீதி மன்றத்தில், நேற்று முன்தினம் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து, கைலாசம் கூறியதாவது: கூட்டுறவு தேர்தல் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர்ந்தேன். விசாரணை செய்த நீதிபதி சுந்தர், 'தேர்தல் முடிவுகளை அறிவிக்கவோ, வெளியிடவோ கூடாது; இது தொடர்பாக எந்த தேர்தலையும் நடத்தக்கூடாது' என, உத்தரவிட்டார். அதை, என் ஜூனியர் வக்கீல் மூலம், தேர்தல் அலுவலரிடம் தெரிவித்தேன். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி, ஓட்டுகள் எண்ணப்பட்டு, இரவு, 11:00 மணிக்கு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு, வரும், 25ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தெரிவிப்போம். இவ்வாறு, அவர் கூறினார். நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X