நாமகிரிப்பேட்டையில் பயிர் காப்பீடு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமகிரிப்பேட்டையில் பயிர் காப்பீடு அறிவிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நா.பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், நடப்பு சம்பா பருவத்தில், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், பின்வரும் வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் விபரம்: ஆயில்பட்டி, ஈஸ்வரமூர்த்திபாளையம், மங்களபுரம், மத்துருட்டு, நாவல்பட்டி, திம்மநாய்க்கன்பட்டி, கார்கூடல்பட்டி 1 (கரியாம்பட்டி), கார்கூடல்பட்டி 2, 3, மூலக்குறிச்சி(மூலக்காடு), முள்ளுக்குறிச்சி, நாரைக்கிணறு, பெரப்பன்சோலை (மாவார்), பெரியக்கோம்பை, ஊனந்தாங்கல், வரகூர்கோம்பை, அரியாகவுண்டம்பட்டி, மூலப்பள்ளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, தொ.பச்சுடையாம்பாளையம், மற்றும் வெள்ளக்கல்பட்டி. ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு, 29 ஆயிரம் ரூபாய் காப்பீடு செய்யலாம். இதற்கு பிரீமியம், 435 ரூபாய் செலுத்த வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் காப்பீடு செய்யப்படுகிறது. விதைப்பு செய்ய முடியாத இனத்திற்கு நவ., 16, பயிர் இழப்பீடு காப்பீடுக்கு நவ., 30 இறுதிநாள். விபரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X