இன்று இந்து எழுச்சி மாநாட்டு ரத யாத்திரைக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இந்து எழுச்சி மாநாட்டு ரத யாத்திரைக்கு வரவேற்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், இன்று (அக்., 14), காலை, காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் - சேலம் சாலை, பொம்மக்குட்டைமேடு லட்சுமி திருமண மண்டபத்தில், இந்து தன் எழுச்சி மாநாடு நடக்கிறது. அதில், 'இந்து மதம் நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்புகளில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், சேவா இண்டர்நேஷனல் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், துறவி ரமண பாரதி ஆகியோர் பேசுகின்றனர். விழாவில், முன்பதிவு செய்துள்ள, 6,000 பேருக்கு, சாளக்கிராமம், துளசி செடி, பழனி விபூதி, மீனாட்சியம்மன் குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 6,000 சாளகிராமம் வைக்கப்பட்டுள்ள ரதம், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, நாமக்கல் சாளக்கிராம மலையை சுற்றி, நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் சுவாமி கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, நிகழ்ச்சி நடக்கும் திருமண மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நகரில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர். ரதம் ஊர்வலமாக வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X