உணவு ஒவ்வாமையால் விபரீதம்: மகள் பலி: பெற்றோருக்கு சிகிச்சை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உணவு ஒவ்வாமையால் விபரீதம்: மகள் பலி: பெற்றோருக்கு சிகிச்சை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, உணவு ஒவ்வாமையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி பலியானாள்.
திருச்செங்கோடு அடுத்த, காந்தி ஆசிரமம் செம்மாம்பாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த சைசிங் தொழிலாளி கந்தையா, 38. இவரது மனைவி சந்தோசம், 30. தம்பதியருக்கு, அனுஷா, 11, சத்தியப்பிரியா, 7, கிருத்திஷ், 4 என, மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, வாலரைகேட் பகுதி, சாலையோர கடையில், சிறுகீரை வாங்கி, சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி எடுத்துள்ளனர். தொடர்ந்து, வீட்டிலேயே கை வைத்தியம் பார்த்துள்ளனர். நேற்று மாலை, அனைவருக்கும் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், அனுஷா இறந்தாள். மற்றவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X