புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குப்பை கிடங்கில் தீ வைப்பு: கரூர் அரசு காலனி அருகே, நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும், இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. இதில், சிலர் அடிக்கடி தீ வைக்கின்றனர். இதனால், அங்குள்ள சாலை எப்போதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இருமல், தும்மல் உள்ளிட்ட பிரச்னைகளால், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். குப்பையில் தீ வைப்பதை தடுக்க வேண்டும்.

- டி.பாபு, அரசு காலனி.

உழவர் சந்தையில் போக்குவரத்து நெரிசல்: கரூர், திருச்சி சாலையில், உழவர் சந்தை செயல்படுகிறது. சந்தைக்கு வெளியே, சாலையை ஆக்கிரமித்து, வியாபாரிகள் ஏராளமானோர் கடை வைத்துள்ளனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில், காலையில் வாகனங்களில் செல்ல முடியாமல், தடுமாறும் நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களால் போக்குவரத்து நெரிசல் சரியாக நீண்ட நேரம் ஆகிறது. வெளியே போடப்படும் கடைகளை அகற்ற வேண்டும்.

- ஜெ.ஆனந்த்ராஜ், கரூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X