தெருவிளக்குகள் பராமரிக்கும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெருவிளக்குகள் பராமரிக்கும் பணி தீவிரம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தினமலர் செய்தி எதிரொலியாக, கரூரில் தெரு விளக்குகளை பராமரிக்கும் பணி துவங்கியது. கரூர் நகரில், ஆர்.டி.ஓ., அலுவலக சாலை, கோவை சாலை, உழவர் சந்தை சாலை, வாங்கல் சாலை மற்றும் ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில், பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகி எரியாமல் இருந்தன. இதனால், இரவில் வழிப்பறி மற்றும் விபத்துகள் அதிகரித்து, மக்கள் அச்சத்துக்குள்ளாகினர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில், மின் கம்பங்களில் எரியாமல் இருந்த விளக்குகளை பராமரிக்கும் பணி நேற்று துவங்கியது. நகராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X