குளத்தை தூர் வார நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளத்தை தூர் வார நடவடிக்கை தேவை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்திற்கு, சேங்கல், முனையனூர், உப்பிடமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து சேரும். குளத்திற்கு தண்ணீர் வந்தால், சுற்றுவட்டாரத்தில் உள்ள, 2,600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதைப் பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள் முதலான பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது குப்பை கொட்டப்பட்டு குளம் தூர்ந்து போன நிலையில் உள்ளது. குடிமராமத்து பணியில், குளத்தில் பாதி மட்டும் தூர் வாரப்பட்டுள்ளது. கோவக்குளத்தை முழுமையாக தூர்வார வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X