அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகள்: கரூர், சுங்ககேட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில், சில ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், தான்தோன்றிமலை கோவிலுக்கு செல்வோர், இதை பயன்படுத்தி வந்தனர். இதில் போடப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்து விட்டன. இதனால், பஸ்சுக்கு காத்திருப்போர், நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நிழற்கூடத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.
செயல்படாத சிக்னல்; வாகன நெரிசல்: கரூர் அருகே, திருமாநிலையூரில், ராயனூர் சாலையில், பல மாதங்களுக்கு முன், சிக்னல் விளக்கு அமைக்க கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால், இன்னும் சிக்னல் விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர் - திருச்சி சாலையில், முக்கிய வழித்தடமாக உள்ளதால், விபத்துகளை தடுக்க, புதிய கம்பங்களில் சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் பாயும் கழிவுநீரால் அவதி: கரூர் மாரியம்மன் கோவில் தெருவில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது, மழை பெய்துள்ள காரணத்தால், கழிவுநீர் தொட்டியைச் சுற்றி ஏராளமான செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துளளது. அத்துடன், கழிவுநீர் தொட்டியின் மூடியும் உடைந்து காணப்படுகிறது. இவற்றை சரிசெய்ய வேண்டும்.

மின்கம்பம் சேதம்; மின்தடை அபாயம்: கரூர், கணபதிநகரில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தில் அரிப்பு ஏற்பட்டு, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. பலவீனமாக உள்ள இக்கம்பம், வேகமாக காற்று வீசும்போது, வேகமாக அசைவதால், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதுதொடர்பாக, புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, விபத்து ஏற்படும் முன், சேதமான மின் கம்பத்தை மாற்ற, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி: கரூர் கலைஞர் நகரில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாய் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு வறண்டு விட்டதால், தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயன்படாத நிலையில், குடிநீர் தொட்டி உள்ளது. மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடுகின்றனர். மாற்று குழாய் மூலம் அதில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X