திறன் வெளிப்பாடு போட்டிகள் திறமையை வெளிப்படுத்தும்: போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறன் வெளிப்பாடு போட்டிகள் திறமையை வெளிப்படுத்தும்: போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''திறன் வெளிப்பாடு போட்டிகள், மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான திறன் வெளிப்பாடு போட்டிகள் துவக்க விழா, முதன்மை விழிப்புணர்வு அதிகாரி அபய்குமார் சிங் தலைமையில் நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் விரிவாக்கம் செய்யப்பட்ட டி.என்.பி.எல்., நிறுவனம், 18 ஆண்டுகளாக திறன் வெளிப்பாடு போட்டிகளை நடத்தி வருகிறது.
1,300 பேர்: அதன் மூலம், மாணவர்களின் திறமை வெளிப்படுத்த, ஒரு வாய்ப்பாக அமைகிறது. நடப்பாண்டு, திறன் வெளிப்பாடு போட்டியில், ஒன்பது மாவட்டங்களில் உள்ள, 63 பள்ளிகளைச் சேர்ந்த, 1,300 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

21 பிரிவு: மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தனித்திறன் உண்டு. படிப்பில் சிலர் சுமாராக இருப்பார்கள். ஆனால், மற்ற துறைகளில் முதலிடத்தில் இருப்பார்கள். இந்த திறன் வெளிப்பாடு போட்டியில், 21 வகையான பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்த, மாணவ, மாணவியருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு, திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டி.என்.பி.எல்., நிறுவன செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர்கள் பட்டாபிராமன் (மனிதவளம்) பாலசுப்பிரமணியம் (வணிகம்) தங்கராஜ் (உற்பத்தி) உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X