'ஸ்டாலினுக்கு விளக்கம் தரமுடியும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலினுக்கு விளக்கம் தரமுடியும்'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: ''தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, கோபாலபுரத்துக்கே சென்று, விளக்கம் தரமுடியும்,'' என்று, அமைச்சர் கருப்பணன் கூறினார். ஈரோடு மாவட்டம், பவானி, மயிலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியின், 50வது ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த, சுற்று சூழல்துறை அமைச்சர் கருப்பணன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசைக் குறை கூறும் ஸ்டாலினுக்கு, தமிழகத்தில் எந்தெந்த இடங்களில், எத்தனை வளர்ச்சி திட்டம் செய்யப்பட்டுள்ளது என்பதை, கோபாலபுரத்துக்கு சென்று விளக்கம் கொடுக்க முடியும் அல்லது பொது மேடைக்கு வந்தாலும், விளக்கம் தரமுடியும். தமிழக திட்டத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தக்கூடாதென, நான் கூறவில்லை. அது அனைத்துக்கும் பொருந்தாது. தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டங்களை, மக்கள் எதிர்க்கவில்லை. ஸ்டாலின், ம.தி.மு.க., மட்டுமே எதிர்க்கிறது. தமிழகத்தில் ஆணவம், ஊழல் நிறைந்த கட்சி, தி.மு.க.,தான். கொஞ்சநாள் பொறுத்திருந்து பாருங்கள். தி.மு.க.,வின் ஆட்டம், பாட்டம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X