'முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா': மக்கள் நீதிமய்யம் தலைவர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா': மக்கள் நீதிமய்யம் தலைவர் பேச்சு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ''நான் முதல்வரானால் லோக் ஆயுக்தாவுக்கு தான் முதல் கையெழுத்து,'' என, ம.நீ.ம., தலைவர் கமலஹாசன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, தனியார் கல்லூரியில், 'இளைஞர் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு' என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பேசியதாவது: மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையை, நீங்களே முடிவு செய்து அதன் பாதையில் பயணிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி செல்லும் நீங்கள், வீட்டிலிருந்து செல்லும் போதே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என, முடிவெடுத்து செல்லுங்கள். நம் நாட்டின் விவசாயத்தை, அறிவியல் தொழில்நுட்பம் மூலம், இளைய தலைமுறையினர் காக்க வேண்டும். மாணவர்களும் அரசியலுக்கு வரவேண்டும். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலையை மாற்ற, இளைய தலைமுறையினர் பாடுபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, 'நீங்கள் முதல்வரானால், ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்' என, மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், ''நான் முதல்வரானால் முதலில் என் உடலை பார்த்து கொள்வேன். நான் நன்றாக இருந்தால் தான் மக்களை பாதுகாக்க முடியும். ''என் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா தான். ஊழலை ஒழிக்க தலைமை சரியாக இருந்தால், அனைவரும் சரியாக ஆகிவிடுவர். கச்சா எண்ணெய் விலை, பேரல், 44 டாலராக இருந்தும் விலை குறையவில்லை, அப்போது கிடைத்த, 4.5 லட்சம் கோடி ரூபாயை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தால் யாரும் ஏழையாக இருக்க மாட்டர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-201821:16:35 IST Report Abuse
செந்தமிழன் இப்புடித்தேன் ஒருத்தர் சொல்லிக்கிட்டு திரிஞ்சார் பாவம் இப்ப தாடி வச்சுகிக்கிட்டு திரிகிறார். உங்க நிலைமை இன்னும் மோசம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X