சேலம் வழியே சிறப்பு ரயில்கள்: இன்று முன்பதிவு தொடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் வழியே சிறப்பு ரயில்கள்: இன்று முன்பதிவு தொடக்கம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: டிசம்பரில், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, சேலம் வழியே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை, சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில், டிச., 4 இரவு, 7:00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூர் வழியே, மறுநாள் காலை, 11:05க்கு நாகர்கோவிலை அடையும். அதேபோல், டிச., 11, 18, 25ல், அந்த ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், டிச., 5 மாலை, 5:00 மணிக்கு, நாகர்கோவிலிருந்து கிளம்பி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியே, அடுத்தநாள் காலை, 7:20 மணிக்கு, சென்னை சென்ட்ரலை அடையும். அதேபோல், டிச., 12, 19, 26ல் இயக்கப்படுகிறது. கொச்சுவேலி - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில், டிச., 3 காலை, 7:45 மணிக்கு, கொச்சுவேலியிலிருந்து புறப்பட்டு, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, மறுநாள் மதியம், 2:00 மணிக்கு, ஐதராபாத்தை அடையும். அதேபோல், டிச., 3, 10, 17, 24, 31ல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம் - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில், டிச., 6 இரவு, 9:30 மணிக்கு, எர்ணாகுளத்திலிருந்து கிளம்பி, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, அடுத்தநாள் இரவு, 10:55 மணிக்கு, ஐதராபாத்தை அடையும். அதேபோல், டிச., 6, 13, 20, 27ல் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களின் முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X