ஊழலை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கோர்ட் உத்தரவு: முதல்வர் பதவி விலக அன்புமணி வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊழலை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கோர்ட் உத்தரவு: முதல்வர் பதவி விலக அன்புமணி வலியுறுத்தல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ''முதல்வர் மீதான ஊழலை விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், முதல்வர் பதவி விலக வேண்டும்,'' என, பா.ம.க.,- எம்.பி., அன்புமணி வலியுறுத்தினார்.
சேலத்தில், பா.ம.க.,-எம்.பி., அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி மீதான ஊழலை விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நீதிமன்றமே, ஊழலை சுட்டிக்காட்டியுள்ளதால், முதல்வர் பதவி விலக வேண்டும். மத்திய அரசு நிலக்கரி ஒதுக்கீடு செய்தும், அவசர தேவையென கூறி, கூடுதல் விலைக்கு, கொள்முதல் செய்ததில், தமிழக அரசு பலகோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. அதேபோல், எல்லா துறைகளிலும் ஊழல் நடத்திருப்பதால், முறையாக விசாரித்து, முதல்வர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலுறுப்புகள் தானம் பெற்று, முறைகேடாக, வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தியன் மூலம், 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. அதேநேரம், சுகாதாரத்துறையில், தமிழகம் முதலிடத்தில் இருப்பது எனக்கூறுவது வேடிக்கை. தமிழக அரசின் ஊழலை, மத்திய அரசு கண்டுகொள்ளாதது வேதனை. ஊழல் செய்வதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. தமிழகம் - கேரளா எல்லையோர பகுதிகளில் பரவும் பன்றி காய்ச்சலை தடுப்பதற்கான விழிப்புணர்வு இல்லை. வட மாநிலங்களிலிருந்து வரும் புது வைரஸ் தொற்றுநோயை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X