'மோடி' பெயரில் மோசடி: 'பலே' பெண்ணிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மோடி' பெயரில் மோசடி: 'பலே' பெண்ணிடம் விசாரணை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்: பிரதமர் மோடி பெயரில் மோசடி செய்த பெண்ணிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல், மும்முடியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி, 35. 'குங்குமப்பூ' மகளிர் குழுவில் இணைந்தால், வங்கிகளில் கடன் பெற்று தருவதாக, அப்பகுதி மக்களிடம் ஆசைவார்த்தை கூறி, மாதந்தோறும் பணம் பெற்று வந்தார். அதற்காக, தீர்மான புத்தகம், பண வரவு புத்தகம் ஆகியவற்றை பராமரித்து வந்துள்ளார். பணம் செலுத்தியவர்களுக்கு, புதுவாழ்வு திட்டம் பெயரிட்ட சிறு அட்டையில், வரவு வைத்து கொடுத்துள்ளார். பிரதமர் மோடி, தொழில் தொடங்குவோருக்கு, வட்டியின்றி ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறார். அதற்காக, 5,000 ரூபாய் கட்ட வேண்டும் எனக்கூறி, பலரிடம் பணம் பெற்றுள்ளார். அத்துடன், முதியோர் உதவி தொகை, தமிழக அரசின் உதவி தொகை திட்டங்கள் பெற, பணம் பெற்றுள்ளார். இதுபோல், இரு ஆண்டுகளாக, பலரிடம் பணம் பெற்று, கடன் தொகையை வழங்காமல் ஏமாற்றி வந்தார். இதனால், தலைவாசலைச் சேர்ந்த சரஸ்வதி, 50, பாதிக்கப்பட்டார். இவர், பாப்பாத்தி வீட்டிலிருந்த, 'டி.வி.எஸ்., ஸ்டார் ஸ்போர்ட்' பைக்கை எடுத்துச்சென்றுவிட்டார். இதுகுறித்து, பாப்பாத்தி அளித்த புகார்படி, சரஸ்வதி, அவரது மகன்கள், பாதிக்கப்பட்ட சில பெண்களிடம், தலைவாசல் போலீசார் விசாரித்தனர். அதில், மோடி பெயரில், இந்தியன் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி, 30க்கும் மேற்பட்டோரிடம், பாப்பாத்தி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X