மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 3 அடி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 3 அடி உயர்வு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரு வாரத்தில், மூன்று அடி உயர்ந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்ததால், மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த, 5ல், 101.79 அடியாக சரிந்தது. பின், தமிழகம் - கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதி, டெல்டா மாவட்டங்களில், பருவமழை தீவிரமடைந்தது. இதனால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்த நிலையில், டெல்டா நீர்திறப்பு குறைக்கப்பட்டதால், நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 11 ஆயிரத்து, 402 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 13 ஆயிரத்து, 47 கனஅடியாக உயந்தது. இந்நிலையில், வினாடிக்கு, 7,000 கனஅடியாக இருந்த டெல்டா பாசன நீர்திறப்பு, நேற்று காலை, 9:30 மணிக்கு, 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. வரத்து அதிகரித்ததால், நேற்று, நீர்மட்டம், 104.18 அடியாக உயர்ந்தது. ஒரு வாரத்தில், நீர்மட்டம், 3 அடி உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X