தமிழக முதல்வர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்: ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்: ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: 'தமிழகத்தில் இதுவரை வந்த முதல்வர்கள், அரசு ஊழியர்களை அழைத்து பேசி தீர்வு கண்டனர். தற்போது உள்ள முதல்வர், அழைத்து பேசாமல், சர்வாதிகாரி போல செயல்படுகிறார்' என, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், சுப்பரமணியன்ஆகியோர் கூறினர்.
'தமிழக அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதனால், அரசின் அனைத்து பணிகளும் முடங்கும்' என, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்,; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையினை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ- ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஆயத்த மாநாடு, நேற்று சேலத்தில் நடந்தது.

கோரிக்கைகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், சுப்பரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசிடம் வைத்து வருகிறோம். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அவதூறாகவும் பேசி வருகின்றனர். இந்த அலட்சியப்போக்கை கண்டித்து, நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதில், அனைத்து சங்கங்களும் பங்கேற்பதால், அனைத்து பணிகளும் முடங்கும். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, கடந்த ஓராண்டாக, ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்த அரசு ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டிய தொகையான, 23 ஆயிரம் கோடி ரூபாயை, தமிழக அரசு கையாடல் செய்துள்ளது. மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அமைச்சர்கள் தங்களது சொந்த தேவைக்கு ஒதுக்கிக்கொள்வதால் தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை வந்த முதல்வர்கள், அரசு ஊழியர்களை அழைத்து பேசி தீர்வு கண்டனர். தற்போது உள்ள முதல்வர், அழைத்து பேசாமல், சர்வாதிகாரி போல செயல்படுகிறார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், லோக்சபா தேர்தலில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக மாநாட்டில், தொ.மு.ச., பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்திரராசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசுஉள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X