வீடு தெரியாதென இன்ஸ்பெக்டர்கள் 'காமெடி': நீதிமன்றத்தில் தப்பிய கைதிக்கு பிடிவாரன்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தெரியாதென இன்ஸ்பெக்டர்கள் 'காமெடி': நீதிமன்றத்தில் தப்பிய கைதிக்கு பிடிவாரன்ட்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: நீதிமன்றத்திலிருந்து தப்பிய கைதிக்கு, உயர்நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், 'அவரது வீடு யாருக்கும் தெரியாது' என, இன்ஸ்பெக்டர்கள் பதிலளித்த சம்பவம், உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த, ரவுடி அரை மூக்கன் செல்வம், 45. இவன், குரங்குச்சாவடியில் வசித்தான். கடந்த ஆகஸ்டில், செவ்வாய்ப்பேட்டை மோகன் கொலை வழக்கில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். அதன் மேல்முறையீடு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில், செப்., 5ல், இடைக்கால ஜாமின் பெற்றான். அக்., 5ல் ஆஜராக வேண்டும். அவகாசம் முடிந்து, கடந்த, 9ல், அவன், சேலம் மத்திய சிறையில் ஆஜராக சென்ற நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு நகலை காட்டி, சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. அவனை கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதற்காக, 10ல் நடந்த கூட்டத்தில், செல்வம் எந்த ஸ்டேஷன் எல்லையில் வசிக்கிறான் என, உயரதிகாரிகள் கேட்டனர். அதற்கு, மாநகரிலுள்ள இன்ஸ்பெக்டர்கள், 'தங்கள் எல்லையில் இல்லை' என, தெரிவித்து, ரவுடிக்கு விசுவாசத்தை காட்டினர்.


அதேநேரம், உயர்நீதிமன்றம், மோகன் வழக்கில் தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பில், 11ல், சேலம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்: 3ல், செல்வம் ஆஜரானான். ஆனால், அக்., 23க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட உடன், அவன் போலீசில் சிக்காமல் அங்கிருந்து தப்பினான். போலீசார் கோட்டைவிட்டனர். இதுகுறித்து, ஜே.எம்.எண்: 3 தலைமை எழுத்தர் சுசீலா அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, வழக்குப்பதிவு விபரங்களை, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து, பிடிவாரன்ட் பெற்றார். இந்நிலையில், குரங்குச்சாவடியில் உள்ள வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன், செல்வம் பெங்களூரு சென்றுவிட்டான். அதேநேரம், அவனை கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் முன்வராததது, உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X