'பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி லாபம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி லாபம்'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆத்தூர்: 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, நான்கு லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று, திறந்தவேனில் நின்றபடி மக்களிடம் பேசியதாவது: நீங்கள் ஏழையில்லை. ஏழையாக வைக்கப்பட்டுள்ளீர்கள். ஓட்டுக்கு கொடுக்கும் பணம், உங்கள் சட்டை பையிலிருந்து எடுத்தது. உங்களுக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு, பெரும் பகுதியை, அவர்கள் வைத்துக்கொள்கின்றனர். இது, மோசமான வியாபாரம். 'உன்னால் முடியாது தம்பி' என்று தன்னம்பிக்கையை கலைக்க முயன்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்த பின், அனைத்தையும் எதிர்கொள்ளும் தைரியம் வந்துவிட்டது. இங்குள்ளவர்களை பலமுகங்களாக பார்க்கவில்லை. நாளைய தமிழகமாக பார்க்கிறேன். மக்கள் பிரச்னைகளை விசாரித்து, அரசிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். எங்கள் கட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். உங்கள் மூலமாக தான், மாற்றம் வரப்போகிறது. கச்சா எண்ணெய், ஒரு பேரல், 44 டாலராக இருந்தபோது, விலையை குறைக்கவில்லை. ஐந்து ஆண்டுக்கு முன்பிருந்தே, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியதால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, நான்கு லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. இந்த அரசு மட்டுமின்றி, முன்பிருந்த அரசுகள், இவற்றை செய்துள்ளன. இவை, மக்களுக்கு சேரவேண்டிய பணம்; நாம் தான் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X