வைரமுத்துக்கு எதிராக வாய் திறக்காதது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., தலைவர் கேள்வி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைரமுத்துக்கு எதிராக வாய் திறக்காதது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., தலைவர் கேள்வி

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: ''வைரமுத்துக்கு எதிராக, வாய் திறக்காதது ஏன்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நடந்த, பா.ஜ., மகளிரணி மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய சுகாதார துறையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணியை தொடங்க, தனியார் நிறுவனம் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடக்கிறது. நெல்லை, மதுரை, தஞ்சாவூர் மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு சார்பில், தலா, 150 கோடி ரூபாய் திட்டங்கள் வரவுள்ளன. தமிழக முதல்வர் மீது, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே தவிர, குற்றம் நிரூபித்து, தண்டனை வழங்கவில்லை. அப்படி இருக்கும் போது, எதிர்க்கட்சிகள் முதல்வரை பதவி விலக சொல்வதில் உடன்பாடில்லை. அப்படி பார்த்தால், '2ஜி' வழக்கில், காங்., - தி.மு.க., அரசு, அதில் அமைச்சராக இருந்தவர்கள், பதவி விலகியிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும், அவரது பதவி, அந்தஸ்தை கருதாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரமுத்து மீது, பாடகி சின்மயி, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். தமிழகத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும் குரல் கொடுக்கும் ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் மாளிகையே போதுமான விளக்கத்தை அளித்த நிலையில், கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சபரிமலை பிரச்னையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், பெண்கள், தங்கள் பாரம்பரிய வழக்கத்தை கருதி, அங்கு செல்ல மாட்டோம் எனக்கூறி, போராடுகின்றனர். அவர்களுக்கு, பா.ஜ., ஆதரவு உள்ளது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் தெரிவித்ததை பொருட்டாக கருதவில்லை. அவருக்கு, கூட்டம் தான் தெரியும். கும்பிட தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-அக்-201805:56:30 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan எதிர்கட்சிகள் வாய் திறக்காது. காசுக்கு எதையும் செய்யும் கட்சித்தலைவர்கள் எப்படி பேசுவர். அவர்களும் அதைத்தானே செய்து கொண்டுள்ளனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X