'எந்த தண்ணீர் தேவையென அரசுக்கு தெரியவில்லை': ம.நீ.ம., கட்சி தலைவர் கமல் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'எந்த தண்ணீர் தேவையென அரசுக்கு தெரியவில்லை': ம.நீ.ம., கட்சி தலைவர் கமல் பேச்சு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஓமலூர்: ''எந்த தண்ணீர் தேவையென, அரசுக்கு தெரியவில்லை,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
சேலம் மாவட்டம், ஓமலூர், அண்ணாதுரை சிலை அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில், காரில் நின்றபடி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பேசியதாவது: மாவட்டத்தின் பல இடங்களில், 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடையில் தண்ணீர் எப்போதும் கிடைக்கிறது. அரசுக்கு, எந்த தண்ணீர் தேவை என தெரியவில்லை. அரசியலுக்காக மக்களை சந்திக்கமாட்டேன்; எப்போதும் சந்திப்பேன். மக்களுக்கு தேவையானவற்றை செய்பவர்களை தேர்வு செய்யுங்கள். பெரியவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இளைஞர்கள் குழப்பமில்லாமல், என்னோடு பயணிக்கலாம். உங்கள் பகுதி பிரச்னைகளை, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றத்துக்கான புரட்சி: மேட்டூர், சதுரங்காடியில், அவர் பேசியதாவது: பெரிய அணை உள்ள மேட்டூரில், சில பகுதிகளில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் ரோஷம் வந்து, தங்கள் பணியை சிறப்பாக செய்தால், என் வேலையில் பாதி முடிந்ததாக கருதுவேன். தமிழகத்தில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை, மக்கள், குத்தகைக்கு கொடுத்து விடுகின்றனர். அதை எடுத்தவர்களால் தமிழகம் பாதிக்கிறது. சிறப்பான ஆட்சியை உருவாக்க, நாம் அனைவரும் ஆசிரியர்களாக மாறி, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான புரட்சியில் அனைவரும் இணைய வேண்டும். சேராவிடில், அந்த மாற்றம் சாத்தியமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X