சீர்காழி அருகே அரசியல்வாதிகளுக்கு கிராம மக்கள் தடை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீர்காழி அருகே அரசியல்வாதிகளுக்கு கிராம மக்கள் தடை

Added : அக் 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரசியல்வாதிகள், கிராம மக்கள், மீனவர், தடை

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராம மீனவர் கவியரசன். இவர், கடந்த 10ம் தேதி மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமானார். கடந்த ஐந்து நாட்களாக சக மீனவர்கள் அவரை தேடிவந்த நிலையில் இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர். மீனவர் கவியரசனை தேடவும் அல்லது ஆறுதல் கூறவும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி கொடிகளையும் இறக்கிவிட்டு கொடி மர மேடைகளை வெள்ளை துணியால் மூடினர். மேலும் அரசியல் கட்சியினரோ, அரசியல்வாதிகளோ தொடுவாய் கிராமத்தில் நுழையவும் தடைவிதித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-அக்-201806:18:12 IST Report Abuse
D.Ambujavalli Vaakkaliththu vetri petru vetrivizhaavukku Mattum thalai kaattum m. L. A , m. Pikkalukku ellaa oorkalilum Intha treatment thaan kodukka vendum.
Rate this:
Share this comment
Cancel
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
15-அக்-201800:54:04 IST Report Abuse
S. Rajan எல்லா கிராம மக்களும் இதை செய்தால் நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Gurusamy - Toronto ,கனடா
14-அக்-201823:22:17 IST Report Abuse
Ramalingam Gurusamy ஆபத்து மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆதரிக்காத அரசியல்வாதிகளையும், கட்சிகளையும் ஓரங்கட்டிப் புறக்கணிக்கும் இது போன்ற கிராம மக்களின் எழுச்சி நிகழ்வுகள் வரவேற்பிக்கும் வாழ்த்திற்கும் உரியவைகளே. தொடரட்டும் மக்களின் விழிப்புணர்வு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X