அதிகாரிகளை மிரட்டிய சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளை மிரட்டிய சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த, சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மக்கான் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக சரஸ்வதி, 30, பணியாற்றி வந்தார். பல்வேறு புகார்களால், வி.எம்., செட்டித் தெருவில் உள்ள பள்ளிக்கு, அவர் மாற்றப்பட்டார். ஆனால், மாற்றம் செய்த பள்ளிக்கு செல்லாமல், மக்கான் பள்ளி சத்துணவு கூடத்தை சரஸ்வதி பூட்டி விட்டார். கடந்த, 11ல் விசாரணை நடத்தச் சென்ற, மாவட்ட சத்துணவு அலுவலர் பிச்சாண்டி மற்றும் மாநகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்த சரஸ்வதி, ''விஷம் வைத்து, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளை கொன்று விடுவேன்,'' என மிரட்டினார். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து, கலெக்டர் ராமன், நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X