வக்கீலை வெட்டி கொல்ல முயன்ற வாலிபர் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வக்கீலை வெட்டி கொல்ல முயன்ற வாலிபர் சரண்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆரணி: உயர்நீதிமன்ற வக்கீலை, வெட்டிக்கொலை செய்ய முயற்சித்த வாலிபர், திருவண்ணாமலை அடுத்த, ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் பல்லவன் மேட்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார், இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீலாக உள்ளார். கடந்த, 9ல், காஞ்சிபுரம் அடுத்த, பிள்ளையார் பாளையம், மண்டபம் தெருவில் உள்ள தன் தந்தை ராமசாமியை பார்க்கச் சென்றார். அப்போது, வெளியே வந்த அவரை, ?ஹல்மெட் அணிந்து வந்த ஐந்து பேர், அரிவாளால் வெட்டி விட்டு, டூவீலர்களில் தப்பினர்.காயமடைந்த சிவக்குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிவகாஞ்சி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிவக்குமாரை கொல்ல முயன்றதாக, காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி, 30, என்பவர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற குற்றவியல் நீதிமன்றத்தில், நீதித்துறை நடுவர் மகாலட்சுமி முன், நேற்று முன்தினம் மாலை சரணடைந்தார். இதையடுத்து அவர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X