கணவனை தாக்கிய மனைவி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனை தாக்கிய மனைவி கைது

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை பல்லாவரம் தங்க சாலையை சேர்ந்தவர் கதிரவன். மனைவி அனிதா. இவர்களுக்கு 13 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு பேரும் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது டூவிலரில் வந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, 12 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். தம்பதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கதிரவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அனிதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
போலீசார் விசாரணையில், அனிதா மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அனிதா, தனது ஆண் நண்பர் மூலம் தாக்குதல் நடத்தியதை ஒப்பு கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X