விவசாயிகள் பேரணி: திமுக ஆதரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் பேரணி: திமுக ஆதரவு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விவசாயிகள், பேரணி, திமுக, ஸ்டாலின், ஆதரவு

சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் (பி.ஏ.பி.,) கீழ் தமிழக விவசாயிகளின் கனவுத் திட்டமான ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவும், அக்., 1 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்பட்டும் தண்ணீரை நிறுத்தக் கோரியும், பி.ஏ.பி., பாசன விவசாயிகளின் சார்பில் திருப்பூரில் 15ம் தேதி நடக்கும் கவன ஈர்ப்பு எழுச்சி பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த பேரணியில் பெருமளவில் பங்கேற்க வேண்டும். ஆனைமலையாறு திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அ.தி.மு.க ஆட்சியில் கடந்த ஏழு வருடங்களாக ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை என்பது வேதனைக்குரியது. இந்த திட்டங்கள், அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பி.ஏ.பி., ஒப்பந்தத்தின் பயன், தமிழக விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில், அதிமுக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிட போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-அக்-201809:27:38 IST Report Abuse
Panneerselvam Chinnasamy "சுழன்றும் ஏர் பின்னது உலகம்…" என்னும் வள்ளுவர் வாக்கை உணர்ந்த கட்சி திமுக… எனவேதான் இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து ,உழவர் சந்தை ,கிராமப்புற மாணவருக்கு ஒதுக்கீடு என பல உழவர் நலம் சார்ந்த நலத்திட்டங்களை அவர்கள் செயல் படுத்தினார்கள் … ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உழவர்களின் நண்பன் திமுக…
Rate this:
Share this comment
Cancel
15-அக்-201809:07:35 IST Report Abuse
AROMA S B. RAVICHANDRAN சுடலை பழைய விவசாயிகள் போராட்டத்தில் 3 பேரை உங்க அப்பன் சுட்டுக்கொன்றது நாபகம் இரூக்கா. டுபாக்கூர்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-அக்-201808:11:44 IST Report Abuse
Srinivasan Kannaiya ரியல் எஸ்டேட் ஆரம்பித்து விவசாயத்தை மூட ஆரம்பித்தது நீங்கள்தான்... விவசாயிகளுக்கு சாவுமணி அடித்ததும் நீங்கள்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X