சக்தி பீடத்தில் ராகுல் வழிபாடு : காங்., விளக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
சக்தி பீடத்தில் ராகுல் வழிபாடு
காங்., விளக்கம்

குவாலியர் : மத்திய பிரதேச மாநிலம், ததியாவில், தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் முன், காங்கிரஸ் தலைவர் ராகுல், காவி உடைஅணிந்து, நெற்றியில் குங்கும பொட்டுடன், பீதாம்பரா சக்தி பீடத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.

Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

'இது, ராகுலின் குடும்ப வழக்கம் தான்; அரசியல் எதுவுமில்லை' என, காங்., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், அடுத்த மாதம், 28ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வரும், காங்., தலைவர் ராகுல், அங்குள்ள முக்கிய ஹிந்து கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்; அங்கு நடக்கும் சிறப்பு வழிபாடுகளிலும் பங்கேற்கிறார்.

நேற்று ததியா மாவட்டத்திற்கு சென்ற அவர், அங்கு நடக்கவிருந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்கு முன், அங்குள்ள, பீதாம்பரா சக்தி பீடத்திற்கு சென்று வழிபட்டார்.

காவி வேட்டி, வெள்ளை நிற குர்தா அணிந்து, நெற்றியில் குங்கும பொட்டுடன் காட்சியளித்த ராகுல், கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும்

Advertisement

பங்கேற்றார். நாட்டில் உள்ள, 51 சக்தி பீடங்களில், இதுவும் ஒன்று.

காங்., செய்தி தொடர்பாளர், பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது: காங்., தலைவர் ராகுல், சக்தி பீடத்தில் வழிபடுவது, புதிய விஷயமல்ல. அவரது குடும்ப வழக்கப்படியே, இந்த வழிபாடு நடந்துள்ளது. ராகுலின் பாட்டி இந்திரா, இந்த சக்தி பீடத்தில் வழிபட்டுள்ளார்.

ராகுலின் தந்தையும், முன்னாள் பிரதமருமான, ராஜிவும், இங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் தான், ராகுலும், இங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று உள்ளார். இதில், அரசியல் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில், ஹிந்துக்களின் ஓட்டுகளை கவர்வதற்காகவே, அவர், திடீரென ஆன்மிக கோலத்தில் வலம் வருவதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (39+ 79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
16-அக்-201820:10:41 IST Report Abuse

sankarநீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் உன் பாச்சா பலிக்காது தம்பி - வேஷதாரிகளை இறைவன் விரும்புவதில்லை

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-அக்-201818:57:25 IST Report Abuse

Pugazh Vஇதை ஏன் கண்டிக்கிறார்கள், புரியவில்லை. இந்துக்களின் சக்தி பீடத்தின் மீது நம்பிக்கை வைத்து வணங்குபவர்களை வரவேற்க அல்லவா செய்ய வேண்டும்? நான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் கோவிலுக்கு பிற மத நண்பர்கள் கூட வருவதுண்டு. கும்பிடுவதும் உண்டு. அது அந்தக் காலம்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
16-அக்-201816:03:52 IST Report Abuse

ganapati sbதேர்தலுக்கே ஆனாலும் இந்து சமய வழிபாடு இந்திரா ராஜிவ் மேற்கொண்டு கிறிஸ்தவ சோனியாவால் விட்ட குறை கலந்து கட்டிய ராஹுலால் தொடரட்டும் வரவேற்போம் மேலும் அவர் பிரியங்கா போல இல்லாமல் ஒரு இந்துப்பெண்ணை மணம் செய்து கொள்ளட்டும் பழைய ஊழல் தலைமுறையினரை ஒதுக்கி வைக்கட்டும்

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X