பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது ஒரு நபரே: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
ஒரு நபரே!
பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது...
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை

குர்கான் : ''பயங்கரவாத அமைப்புகளின் ஆதர வாளர்களாக இருப்போர்,ஒற்றை ஆளாக சென்று, தாக்குதல் நடத்தும் சம்பவங்கள், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நடந்துள்ளன. பயங்கரவாதிகளின் இந்த புதுவிதமான தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது தான், நமக்கு உள்ள மிகப்பெரிய சவால்,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் கூறினார்.

பயங்கரவாத,தாக்குதல்,ஒரு நபரே!,உள்துறை அமைச்சர், ராஜ்நாத்,எச்சரிக்கை


என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய கமாண்டோ படையின், ௩௪ம் ஆண்டு உதய தின விழா, ஹரியானா மாநிலம், குர்கானில், நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசியதாவது:
பயங்கரவாத தாக்குதல்களை முறியடிப்பதில், என்.எஸ்.ஜி., ஆற்றி வரும் பங்கு மகத்தானது. அதனால் தான், 2008ல், மும்பையில் நடந்ததாக்குதலுக்கு பின், நாட்டில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை தவிர, வேறு எங்கும் பெரிய அளவில், பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை. பயங்கரவாதம், ஒரு நாட்டுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள பிரச்னையல்ல; இது, உலக அமைதியை சீரழிக்கிறது.



பயங்கரவாதிகளுக்கு, சமூக வலைதளங்களும் உதவி செய்கின்றன. சமூக வலைதளங்கள் மூலமாக, இளைஞர்களை பயங்கரவாதிகளாக

மாற்றும் முயற்சியில், பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுஉள்ளன.பயங்கரவாத அமைப்புகள், தற்போது, புதுவிதமான தாக்குதல்களில் ஈடுபடு கின்றன. பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர் களாக இருப்போர், ஒற்றை ஆளாகச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவங்கள், சமீபத்தில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நடந்தன.

இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்வது தான், நமக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவால். இந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உளவு துறைக்கு மாற்றம்


நம் நாட்டு எல்லை பகுதியில், உளவுப் பணியை மேம்படுத்தும் நோக்கில், எஸ்.எஸ்.பி., எனப்படும், சஷத்ர சீமா பல் பிரிவைச் சேர்ந்த துணை ராணுவ படையிலிருந்து, 2,000 வீரர்கள், உளவுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், 2016ல், மத்திய உள்துறை செய லருக்கு எழுதிய கடிதத்தில், 'எல்லையில் உளவுப் பணியை பலப்படுத்த வேண்டும்' என, கூறி இருந்தார். இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், எஸ்.எஸ்.பி.,யிலிருந்து, 2,000 வீரர்களை, உளவுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.



'லோன் வுல்ப்' தாக்குதல்!

பயங்கரவாதிகள் நடத்தி வரும் புதுவிதமான தாக்கு தல்கள் குறித்து, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:தனி நபர் நடத்தும் தாக்குதல்கள், 'லோன் வுல்ப்' என அழைக்கப் படுகின்றன. தமிழில் இதை, 'ஒற்றை ஓநாய் தாக்குதல்' எனலாம்.தனிநபர் தான், இந்த தாக்குதலில் ஈடுபடுகிறார்.
இவர்களை, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்பு கள், தாக்குதல் நடத்துவதற்காக அனுப்புவதில்லை பயங்கரவாத

Advertisement

அமைப்பு களின் ஆதரவாளர்களாக இருக்கும் இவர்கள், தாங்களாகவே, மக்கள் கூட்டம் அதிகமுள்ள ஓட்டல், இரவு விடுதி களில், துப்பாக்கியால் சரமாரியாக சுடுவது, மக்கள் கூட்டத்துக்கு நடுவே, வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்வது போன்ற தாக்குதல்களில் ஈடுபடு கின்றனர். தாக்குதலில் ஈடுபடுவோர், பெரும் பாலும், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டு விடுகின்றனர்.

இந்த தாக்குதல் முடிந்த பின், 'நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம்' என, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகள் தம்பட்டம் அடிப்பதும் வழக்கமாகிவிட்டன. அமெரிக்கா வின், லாஸ் வேகஸ் நகரில், கடந்த ஆண்டு அக்டோபரில், விடுதி ஒன்றில், ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில், 58பேர் இறந்தனர்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில், கடந்த ஆண்டு, ரயில்வே ஸ்டேஷன் அருகே, மக்கள் கூட்டத்தின் மீது, மர்ம நபர் ஒருவன். வாகனத்தை ஓட்டி தாக்கு தல் நடத்தினான். இந்த இரண்டு சம்பவங்களும், உலகையே அதிர்ச்சியடைய செய்தன.

தற்போது, உலகின் பல பகுதிகளிலும், பயங்கர வாதிகளின் ஆதரவாளர்கள், இது போன்ற தாக்குதல்கள் நடத்துவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இவற்றை முறியடிப் பது, பாதுகாப்பு படையினருக்கு, பெரும் சவாலாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-அக்-201816:13:23 IST Report Abuse

Vijay D Ratnamஒருவன் பயங்கரவாதி என்று நிரூபணமானால் அவனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் மக்களே நடு ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தினால் பயங்கரவாதி எப்படி உருவாவான்.

Rate this:
தலைவா - chennai,இந்தியா
17-அக்-201821:39:23 IST Report Abuse

தலைவா எனக்கு தெரிந்து மக்களின் நல்வாழ்வை பொருளாதாரத்தை நசுக்கும் சிதைக்கும் ஒற்றை நபர் தாமோதர மோடிதான்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-அக்-201808:30:06 IST Report Abuse

Srinivasan Kannaiyaவறுமையின் விளிம்பில் உள்ள இளைஞர்கள் தான் பிரதிபலனுக்காக ஒற்றை ஓநாயாக செயல்படுகிறார்கள்...

Rate this:
17-அக்-201805:26:36 IST Report Abuse

ஆப்புபுதுசா கண்டுபிடிச்சு சொல்றாரு பாவம்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X