வங்கி மோசடி எப்படி நடக்கிறது? அறிக்கை தாக்கல் செய்தது சி.வி.சி., Dinamalar
பதிவு செய்த நாள் :
வங்கி மோசடி எப்படி நடக்கிறது?
அறிக்கை தாக்கல் செய்தது சி.வி.சி.,

புதுடில்லி : வங்கிகளில் கடன் மோசடி உள்ளிட்ட மோசடிகள் எப்படி நடக்கின்றன என்பது குறித்து, சி.வி.சி., எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளது.

வங்கி,மோசடி,எப்படி,நடக்கிறது?,அறிக்கை,தாக்கல்,செய்தது சி.வி.சி.,


பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்வது, மோசடி செய்வோர் வெளிநாடு களுக்கு தப்பிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதைத் தவிர, வங்கிகளில் பல்வேறு மோசடிகளும் நடந்து வருகின்றன.


இவ்வாறு நடந்துள்ள, 100 மிகப் பெரிய மோசடிகள் குறித்து, மத்திய அரசின் ஊழல் தடுப்பு அமைப்பான, சி.வி.சி., எனப்படும், மத்திய

கண்காணிப்பு ஆணையம், விரிவாக ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.இது குறித்து, இந்தியன்வங்கியின் முன்னாள் தலைவரான, மத்திய கண்காணிப்பு ஆணையர், டி.எம்.பாசின் கூறியதாவது:

நாடு முழுவதும், வங்கிகளில் நடந்த, 100 பெரியமோசடிகள் குறித்து, விரிவாக ஆராய்ந்தோம். நகை, உற்பத்தி, வேளாண், விமான சேவை, ஊடகம்என, 13 துறைகளில் நடந்த மோசடிகள் குறித்து ஆராயப்பட்டது.இந்த மோசடி, எந்தெந்தவகைகளில் நடக்கின்றன,

மோசடி செய்வதற்கு வங்கி நடைமுறையில் உள்ள ஓட்டைகள் என்ன என, பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி, தற்போது அறிக்கையை தயாரித்துள்ளோம்.இந்த அறிக்கையில், எந்த வங்கியின் பெயரும், மோசடி செய்த நிறுவனங்களின் பெயர்கள் இருக்காது. ஆனால்,எப்படி மோசடி நடந்தது என்பது குறித்து முழுமையாகவிவரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற மோசடிகளை தடுப்பதற்கு, வங்கிகள் மற்றும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

Advertisement

குறித்தும் விவரித்துள்ளோம். போதிய கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாதது, வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்றவை, முக்கிய காரணங்களாக உள்ளன.இந்த அறிக்கையை, மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.

இது போன்ற மோசடிகளை விசாரிக்கும், சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்று அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளோம்.இந்த அறிக்கையின் அடிப்படையில், வங்கிகளின் செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
17-அக்-201820:47:37 IST Report Abuse

samuelmuthiahrajமோசடி செய்த நபர்களின் பெயர்கள் மற்றும் பொறுப்புகள் வெளிவந்தால் தானே மோசடி செய்யும் கும்பல் அவமானத்திற்கு உள்ளாக முடியும் அதுபோல மோசடி செய்து சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்கு மனதில் ஒரு பயம் ஏற்படும்

Rate this:
tamil - coonoor,இந்தியா
17-அக்-201814:56:34 IST Report Abuse

tamilகாங்கிரஸ் தான் காரணம் என்று சொல்ல மறந்துவிட்டார்களோ

Rate this:
Siva_Muscat - Muscat,இந்தியா
17-அக்-201812:54:13 IST Report Abuse

Siva_Muscatஇதற்கு மூல காரணம் வறுமை, பேராசை மற்றும் ஊழல் தான். தனி மனித ஒழுக்கம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. நீ என் வங்கி கடன் கட்டவில்லை என்று கேட்டால், விஜய் மல்லையா நீரவ் மோடி எல்லாம் பணம் கட்டாம ஓடி போகலையா என்கிறார்கள் ஏழை விவசாயி என்ன பண்ணுவான் என்பார்கள். ஒரு புறம் நேர்மையா பணம் திருப்பி கட்டும் விவசாயிக்கு திடிரென்று பணம் கட்ட முடியாமல் போனால், அவர்களுக்கு அவகாசம் கொடுக்க மறுக்கும் அதிகாரிகள், பெரும் பணக்காரர்கள் கொடுக்கும் எச்சை காசிற்காக அவர்களோட கடனை reschedule செய்கிறார்கள். ஒரு புறம் அப்பாவி மக்கள் மறுபுறம் சுயநலம் படைத்த கொள்ளைக்காரர்கள், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள். இந்த மாதிரி மனிதர்களால் மக்கள் ஓட்டுக்கு பணம் கேட்கிறார்கள் அதை பயன்படுத்தி, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். ஐம்பது வருட திருட்டு திராவிட கட்சிகளின் சாதனை இது தான்

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X