'ஆன்லைன்' பட்டாசு விற்பனை தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஆன்லைன்' பட்டாசு விற்பனை
தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, தமிழகத்தில், 'ஆன்லைன்' வழியாக, பட்டாசு விற்பனை செய்ய, தடை விதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன், பட்டாசு, விற்பனை,  தடை ,விதிக்க, ஐகோர்ட், உத்தரவு


சென்னையை சேர்ந்த, பட்டாசு வியாபாரி, ஷேக் அப்துல்லா தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னையில், தீவுத் திடலுக்கு பட்டாசு விற்பனை கடைகள் மாற்றப்பட்டன. இருந்தும்,சட்ட விரோதமாக, பூக்கடை பகுதிகளில், சிலர் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.தற்போது, இணைய தளங்களை துவக்கி, ஆன்லைன் வழியாக, பட்டாசு விற்பனையை, பலர் அறிமுகப்படுத்தி உள்ளனர்

. 'ஆர்டர்' பதிவுக்காக, இணையதளங்களில்

விளம்பரமும் செய்கின்றனர். எங்களை பொறுத்த வரை, சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை மட்டுமே, விற்பனை செய்கிறோம். ஆன்லைன் வழி பட்டாசு வர்த்தகத்தால், சென்னையில், சீன பட்டாசு களை குறைந்த விலைக்கு விற்பர். அதனால், சிவகாசி பட்டாசுவிற்பனையில் பாதிப்பு ஏற்படும்.

வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியின் அனுமதியின்றி, அரசுஅதிகாரிகளின் ஆய்வு இன்றி, ரகசியமாக, ஆன்லைன் விற்பனை நடக்கிறது. இதனால்,நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.பட்டாசு விற்பனையை, ஆன்லைனில் மேற்கொள்ள தடை விதிக்கும்படி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனருக்கு, செப்., 23ல், மனு அனுப்பினேன்.

'ஆன்லைன்' பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து, வெடிபொருள்கட்டுப்பாட்டு அதிகாரி, எந்த உத்தர வும் பிறப்பிக்கவில்லை. ஆன்லைன் வர்த்தகத்தை தொடர அனுமதித்தால், பட்டாசு விற்பனையை கண்காணிக்க முடியாமல் போய் விடும்; அசம்பா விதத்தையும் தடுக்க முடியாது. எனவே, ஆன்லைன் வழியாக பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கும்படி மத்திய அரசு அதிகாரி மற்றும் மாநகர போலீஸ்

Advertisement

கமிஷனர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தர விட வேண்டும்.என் மனுவை பரிசீலிக்கவும், உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வாயிலான பட்டாசு விற்பனைக்கு, தடை விதிக்கும்படி, அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிஉத்தரவிட்டார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை, நவ., 15க்கு தள்ளி வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (5+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-201817:32:38 IST Report Abuse

ஆப்புஅதிகாரிகள் ஏன் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தை தடுக்கணும்? அவிங்களுக்கு யார் தீபாவளி போனஸ் குடுக்குறாங்க?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-அக்-201808:40:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaஒரு பக்கம் பி எம் டிஜிட்டல் டிஜிட்டல் என்கிறார்... இங்கே தடை கேட்கிறார்கள்...?

Rate this:
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
17-அக்-201805:05:57 IST Report Abuse

Palanisamy Sekarசென்ற வருடம் இதே சமயத்தில்..பீ ஜே பி இன்றைய ராணுவ அமைச்சர் சொன்னார்..சீனாவிலிருந்து பட்டாசுகளை தடை செய்வது நிச்சயம்..அதில் எந்த ஒரு சந்தேகமும் வேணாம்ன்னு சொன்னாரு..தடை செஞ்சாங்களா? அத போலத்தான்..பீ ஜே பி இத்துணை வருஷம் காஞ்சுபோயிருந்தாங்க..இப்போ அவுக காட்டுல புயலாக பணமழை புயலாக குவியுது..விடுவாங்களா? ஆன்லைன் என்பதெல்லாம் இவர்களுக்கு ஆதாயம் தருகின்ற விஷயம் என்பதால்..இந்த டூபாக்கூறுகளை இனியும் நம்பவே நம்பாதீங்கோ..

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X