அன்னிய நேரடி முதலீட்டை அள்ளியது இந்தியா; ஆறு மாதங்களில் ரூ.1.54 லட்சம் கோடி குவிந்தது Dinamalar
பதிவு செய்த நாள் :
அன்னிய நேரடி முதலீட்டை அள்ளியது இந்தியா
ஆறு மாதங்களில் ரூ.1.54 லட்சம் கோடி குவிந்தது

நியூயார்க்: இந்தியா, ஆறு மாதங்களில், 2,200 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக, ஐ.நா., வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  அன்னிய நேரடி முதலீடு, அள்ளியது, இந்தியா


இக்கூட்டமைப்பு, சர்வதேச முதலீடுகள் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தாண்டு, ஜன., - ஜூன் வரை, இந்தியா, 2,200 கோடி டாலர், அதாவது, 1.54 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்து, தெற்காசியாவின், 'டாப் 10' நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இப்பிராந்தியம் ஈர்த்த, அன்னிய நேரடி முதலீட்டில், இந்தியாவின் பங்களிப்பு, 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இதே காலத்தில், சீனா, 7,000 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்து, முதலிடத்தை பிடித்துள்ளது.அடுத்து, பிரிட்டன், 6,550 கோடி டாலர்; அமெரிக்கா, 4,650 கோடி டாலர்; நெதர்லாந்து, 4,480 கோடி டாலர் ; ஆஸ்திரேலியா, 3,610 கோடி டாலர் ; சிங்கப்பூர், 3,470 கோடி டாலர் மற்றும் பிரேசில், 2,550 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளன.

அமெரிக்கா:


இந்தாண்டு, ஜன., - ஜூன் வரை, சர்வதேச அன்னிய நேரடி முதலீடு, 41 சதவீதம் குறைந்து, 47 ஆயிரம் கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 79,400 கோடி டாலராக இருந்தது. அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்த வரி சீர்திருத்தங்களால், சர்வதேச அன்னியநேரடி முதலீடு குறைந்து உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள அவற்றின் துணை நிறுவனங்களின் லாபத்தை, அதிக அளவில் தாயகத்திற்கு கொண்டு வந்தன.
குறிப்பாக, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் செயல் பட்டு வரும் நிறுவனங்கள் வாயிலான வருவாய், அதிக அளவில்அமெரிக்காவிற்கு வந்துள்ளது.இது தவிர, வரி சீர்திருத்தத்தின் தாக்கத்தை ஊகிக்க முடியாத சூழலில், அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்கள், வெளிநாடுகளில் ஈட்டிய வரு வாயை, தாயகத்திற்கு கொண்டு வந்தன.மேலும், தீர்வு காணப்படாத சர்வதேச வர்த்தக பிரச்னைகள், அமெரிக்கா - சீனா இடையிலான வரி உயர்வு மோதல் போன்றவற்றாலும், சர்வதேச அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது.


புதிய திட்டங்கள்


அதே சமயம், அயல்நாடுகளில் புதிய திட்டங்களில் மேற்கொள்ளும் முதலீடு, 42சதவீதம் வளர்ச்சி கண்டு, 45,400 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும் போது, மதிப்பீட்டு காலத்தில், வளர்ந்த நாடான அயர்லாந்தில், அன்னிய நேரடி முதலீடு,8,100 கோடி டாலர் குறைந்துள்ளது.அதுபோல, சுவிட்சர்லாந்தி லும், அன்னிய நேரடி முதலீடு, 7,700 கோடி டாலர் சரிவடைந்துள்ளது.

Advertisement

அதேசமயம், இதே காலத்தில், வளரும் நாடுகளின் அன்னிய நேரடி முதலீடு, 4 சதவீத அளவிற்கே குறைந்து, 31 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இதில், ஆசிய நாடுகளின் பங்கு, 22 ஆயிரம் கோடி டாலராகும். மிக அதிகமாக, கிழக்கு ஆசிய நாடுகளில் தான், அன்னிய நேரடி முதலீடு, 16 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. தேர்தல், விலைவாசி போன்றவற்றால், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில், அன் னிய நேரடி முதலீடு, 6 சதவீதம் சரி வடைந்து உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மிகக் குறைவு


பணக்கார நாடுகளில், அன்னிய நேரடி முதலீடு அதிக அளவில் குறைந்துள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது, வளரும் நாடுகளில் அன்னிய நேரடி முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு, மிகக் குறைவாகவே உள்ளது.

-ஜேம்ஸ் ஸான்இயக்குனர்,

முதலீட்டு பிரிவு, ஐ.நா., வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான கூட்டமைப்பு


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
17-அக்-201819:51:47 IST Report Abuse

Muruganஅந்நிய முதலீடு இந்தியாவில் அதிகரித்தாலும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது ……………...

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
17-அக்-201812:35:54 IST Report Abuse

sahayadhasஉண்மை என்றால் நல்லது.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-அக்-201811:18:58 IST Report Abuse

Malick Rajaஅவனவன் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்றிருக்கையில் சினிமாப்பாட்டு கேட்க சொன்ன கதையாக இருக்கிறது .. அறிவுடைமை மனிதர்களுக்குமட்டும்தானோ ?

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X